Home தமிழகம் “தனி நீதிபதி மதுரை வழக்கு விசாரணை – சர்ச்சை தொடர்கிறது”

“தனி நீதிபதி மதுரை வழக்கு விசாரணை – சர்ச்சை தொடர்கிறது”

உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு விசாரித்த வழக்கை சென்னையில் தனி நீதிபதி தனியாக விசாரணைக்கு எடுத்தது ஏன் என்ற கேள்வி உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடையே எழுந்துள்ளது. குறிப்பாக, கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் தனி நீதிபதி தலையிட்டது தவறு என்ற கருத்தும் அவர்களிடமிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனி நீதிபதி செந்தில்குமார் ஐந்து நாட்களுக்கு முன்பு ஒரே நேரத்தில் இரண்டு வழக்குகளையும் விசாரித்ததாக கூறப்படுகிறது. இதில் ஒரு வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையிலே, மற்றது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், தமிழக வெற்றி கழகத்தின் மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலாச்சாரி ஆஜராக இருந்தார். ஆனால், அவர் தன்னுடைய கருத்துக்களை முழுமையாக முன்வைத்தாரா என்பது வெளிப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, தனி நீதிபதி பல்வேறு கருத்துக்களை கூறியதையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 41 பேர் உயிரிழந்த கரூர் நிகழ்வைத் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து உடனடியாக விசாரிக்க உத்தரவும் அவர் பிறப்பித்திருந்தார்.

இந்த சூழ்நிலையில், தனி நீதிபதி மதுரை வழக்கை தனியாக விசாரித்தது தவறு என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், சிறப்பு புலனாய்வு குழு தொடர்பாக பல கேள்விகளும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் எழுப்பப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கும்போது, சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவராக ஐ.ஜி. அஷ்ராக்கர் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் புலன் விசாரணை நடத்திய அனுபவம் கொண்டவர் என்பதால், அவரை தலைவராக நியமித்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.