Home உலகம் “சட்டப் போராட்டம்: வீராசாமி ஹோட்டல் எதிர்காலம் என்ன?”

“சட்டப் போராட்டம்: வீராசாமி ஹோட்டல் எதிர்காலம் என்ன?”

100 ஆண்டுகளை தொடர்ந்தும் செயல்பட்டு வரும் லண்டனின் பழமையான இந்திய உணவகமான வீரசாமி ஹோட்டல், தொடர்ந்து இயங்குவதற்காக சட்டப் போராட்டத்தில் இறங்கியுள்ளது. இந்திய–பிரிட்டன் இரட்டை கலாச்சாரத்தின் பாலமாக விளங்கிய பாரம்பரியமிக்க வீரசாமி ஹோட்டலை காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலோ-இந்திய ராணுவ அதிகாரியான எட்வர்ட் பால்மர் 1926 ஆம் ஆண்டு இந்த ஹோட்டலைத் தொடங்கினார். ஹோட்டலுக்கு தனது பாட்டி பெயரை வைத்து வீரசாமி என அழைக்க திட்டமிட்டார் பால்மர். ஆனால் எழுத்துப் பிழை காரணமாக வீரசாமி எனவே அச்சிடப்பட்ட பெயர் நிலைபெற்றது.

இந்த ஹோட்டலில் ராணி எலிசபெத், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி உள்ளிட்ட உலக புகழ் பெற்றோர் உணவு உண்டுள்ளனர். இந்த நிலையில், உணவகம் அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளர் குழுவான கிரவுன் எஸ்டேட் நிறுவனம் அந்த கட்டடத்தை அலுவலகங்களாக மாற்ற திட்டமிட்டுள்ளது.

இதனால் உணவகத்தின் குத்தகை காலத்தை நீட்டிக்க மறுத்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த உணவகத்தை காப்பாற்ற பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு அடுத்த ஆண்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.