• முகப்பு
  • தமிழகம்
  • தேர்தல் 2026
  • இந்தியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஆரோக்கியம்
  • திரையுலகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
  • ஆன்மீகம்
Search
Wednesday, March 25, 2026
Kongu Today Kongu Today
Kongu Today Kongu Today
  • முகப்பு
  • தமிழகம்
  • தேர்தல் 2026
  • இந்தியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஆரோக்கியம்
  • திரையுலகம்
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோமொபைல்
  • ஆன்மீகம்
Home உலகம் ”உலகில் முதன்முறையாக அமல்படுத்தப்படும் கடும் சமூக ஊடகத் தடை”!
  • உலகம்

”உலகில் முதன்முறையாக அமல்படுத்தப்படும் கடும் சமூக ஊடகத் தடை”!

By
Devi
-
Modified date: November 24, 2025
Facebook
Twitter
Pinterest
WhatsApp

    ஆஸ்திரேலியா அரசு 16 வயதிற்கு கீழ் உள்ள பயனர்களுக்கான சமூக ஊடக கணக்குகளை முழுமையாகத் தடுக்கும் வகையில் முக்கியமான சட்டத்தை அறிவித்துள்ளது. இந்த புதிய சட்டம் 2025 டிசம்பர் 10ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. உலகில் முதன்முறையாக, குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.

    இந்த கட்டுப்பாட்டால் ஆஸ்திரேலியாவில் உள்ள சமூக ஊடக பிரபலங்கள் பெரும் பதட்டத்தில் உள்ளனர். உதாரணமாக, 23 பில்லியன் பார்வையாளர்கள் பின்தொடர்கின்ற YouTube சேனலை நடத்தும் ஜார்ஜன் பார்க்லே, தனது மெல்போர்ன் ஸ்டுடியோவை வெளிநாட்டிற்கு மாற்றிப் பதிவேற்றப் பரிசீலித்து வருகிறார்.

    “வெளிநாடுதான் பணம் தரப்போகிறது” என்ற அவரது கவலை, இந்த சட்டத்தின் விளைவுகளை வெளிப்படுத்துகிறது. ஆஸ்திரேலிய சமூக ஊடக சந்தை வருடத்திற்கு சுமார் 9 பில்லியன் டாலர் வருமானம் ஈட்டும் நிலையில், இச்சட்டம் அமலுக்கு வந்தால் விளம்பரதாரர்கள், பார்வையாளர்கள் மற்றும் பின்தொடர்பவர்கள் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    16 வயதிற்குட்பட்டவர்கள் கணக்குகளை வைத்திருந்தால் அவை முடக்கப்படும். இதனால் YouTube, TikTok போன்ற தளங்கள் தனது அல்காரிதம்கள் மூலம் பார்வையாளர்களை தக்கவைக்க முடியாமல் போகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    இதற்கிடையில், 15 வயதான உணவுப் பிளாக்கர் டிமி ஹெரிக்ஸ்லிம் போன்ற இளம் கலைஞர்கள் மிகுந்த பாதிப்பை எதிர்நோக்குகின்றனர். “என் இணைப்பு (linked) கணக்கு வேலை செய்யாவிட்டால் நான் புதிய கணக்கைத் தொடங்க வேண்டியதே” என்று அவர் கூறியுள்ளார்.

    இதனால் உள்ளூர் மைக்ரோ இன்ப்ளூயன்சர்கள் மட்டுமல்லாமல், குழந்தைகள், பார்வையாளர்கள், கண்டென்ட் தயாரிப்பவர்கள் அனைவரும் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரலாம். மேலும் இந்தத் தடை காரணமாக, எதிர்கால சமூக ஊடகப் பணிகள் மற்றும் அவற்றின் நீடித்த நிலைத்தன்மை குறித்த நம்பிக்கையும் கேள்விக்குறியாகலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

    குழந்தைகளை மையமாகக் கொண்டு நல்ல தரமான உள்ளடக்கங்களை உருவாக்கி வந்தவர்களுக்கும் இத்தடை பெரும் இழப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

    • TAGS
    • 16 Vayatukku uṭpaṭṭavarkaḷ kaṇakkukaḷ muṭakkappaṭum.
    • 16 வயதுக்கு உட்பட்டவர்கள் கணக்குகள் முடக்கப்படும்.
    • Social media account
    • Social Media Ban
    • TikTok
    • YouTube
    • சமூக ஊடக கணக்கு
    Facebook
    Twitter
    Pinterest
    WhatsApp
      Devi
      Devi
      தற்போதைய ட்ரெண்டிங் செய்திகள் மற்றும் பொதுமக்களுக்குப் பயனுள்ள விழிப்புணர்வு கட்டுரைகளை கொங்கு டுடே தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

      RELATED ARTICLESMORE FROM AUTHOR

      பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஷியா அமைப்பினர்
      உலகம்

      “ஈரானுக்கே போயிருங்க!” – ஷியா முஸ்லிம்களைச் சீண்டிய பாகிஸ்தான் ராணுவ தளபதி: வெடித்தது புதிய சர்ச்சை!

      லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்தும் வான்வழித் தாக்குதல்
      உலகம்

      ஈரான் தாக்குதலுக்கு அரபு நாடுகள் ஏன் இன்னும் பதிலடி கொடுக்கவில்லை? 5 முக்கிய காரணங்கள்!

      பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி
      உலகம்

      இந்தியா மற்றொரு போருக்குத் தயாராகிறது: பகீர் கிளப்பும் பாகிஸ்தான் அதிபர்

      ஆபரேஷன் எபிக் ஃபியூரியில் பங்கேற்கும் அமெரிக்காவின் F-35 மற்றும் B-2 ஸ்டெல்த் விமானங்கள்
      உலகம்

      ஆபரேஷன் எபிக் ஃபியூரி: ஈரானைத் திணறடிக்கும் அமெரிக்காவின் AI மற்றும் தற்கொலை ட்ரோன்கள் – முழு பட்டியல்!

      பிரதமர் மோடி நெதன்யாகுவிடம் பேச்சு
      உலகம்

      மத்திய கிழக்கு போர்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் பிரதமர் மோடி அவசர ஆலோசனை! உடனடியாக பதற்றத்தைக் குறைக்க வலியுறுத்தல்!

      Kongu Today
      KonguToday.com is an independent Tamil digital news platform that brings you the latest updates from Tamil Nadu, India, and across the world covering politics, business, cinema, sports, technology, health, lifestyle, and automobiles. We are committed to delivering accurate, fast, and responsible journalism with a focus on verified facts and balanced reporting.
      Contact us: thekongutodayoffl@gmail.com

      EVEN MORE NEWS

      பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஷியா அமைப்பினர்

      “ஈரானுக்கே போயிருங்க!” – ஷியா முஸ்லிம்களைச் சீண்டிய பாகிஸ்தான் ராணுவ தளபதி: வெடித்தது புதிய...

      March 23, 2026
      இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை அருந்ததி ரெட்டி

      ஆஸ்திரேலிய மண்ணில் மிரட்டிய இந்திய புயல்! ஐசிசி விருது வென்று அசத்திய அருந்ததி ரெட்டி!...

      March 23, 2026
      நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி எரிசக்தி பாதுகாப்பு குறித்து உரையாற்றும் காட்சி

      இந்தியாவிற்கு எரிசக்தி தட்டுப்பாடு அபாயமா? பிரதமர் மோடியின் முக்கிய எச்சரிக்கை மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள்!

      March 23, 2026

      POPULAR CATEGORY

      • தமிழகம்474
      • ஆரோக்கியம்373
      • இந்தியா256
      • உலகம்226
      • தகவல் களஞ்சியம்160
      • திரையுலகம்128
      • விளையாட்டு62
      • About Us
      • Contact Us
      • Privacy Policy
      • Terms & Conditions
      • Disclaimer
      © 2025 KonguToday.com. All rights reserved.