Home விளையாட்டு ”இந்திய அணிக்கு சாம்பியன் பட்டம்”

”இந்திய அணிக்கு சாம்பியன் பட்டம்”

டாக்காவில் நடைபெற்ற மகளிர் கபடி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. 2012 ஆம் ஆண்டு ஈரானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய இந்திய அணி, அதன் பின்னர் இவ்வாண்டு மீண்டும் இந்த சாதனையை படைத்துள்ளது.

உலகக் கோப்பை மகளிர் கபடி போட்டியில் இந்திய அணி மறுபடியும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது. டாக்காவில் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் சீன தைப்பே அணியை 35–28 என்ற கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி கோப்பையை வென்றுள்ளது.

2012 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஈரானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றிருந்த நிலையில், அதன் பின்னர் இவ்வாண்டு இந்திய மகளிர் அணி மீண்டும் இந்த சாதனையை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.