கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 3-ஆம் தேதி நெல்லையில் இரவு 9:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:30 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல், டிசம்பர் 4-ஆம் தேதி திருவண்ணாமலையில் இரவு 7:55 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், மறுநாள் காலை 8:30 மணிக்கு நெல்லை சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








