நெல்லையில் திருடச் சென்ற வீட்டில் ஒரு ரூபாய்க்கூட இல்லாததை கண்ட திருடன், வீட்டு உரிமையாளருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பழையப்பேட்டை பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் பால், தனது மகளை பார்க்க குடும்பத்துடன் மதுரைக்கு சென்றிருந்தார். இதைக் கிடையாகக் கொண்ட மர்ம நபர், அவர்களின் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்தார். பீரோவை உடைத்து நகை அல்லது பணம் உள்ளதா என்று தேடி பார்த்தார்.
இதன் பின்னர், வீட்டில் இருந்த ₹1,000 மதிப்பிலான உண்டியலை மட்டும் எடுத்துச் சென்றார். கடைசியில், வீட்டு உரிமையாளருக்காக ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.
அந்த கடிதத்தில், “வீட்டில் ஒரு ரூபாய்கூட இல்லை. எதற்காக இத்தனை CCTV கேமரா? என்னை மன்னித்துவிடுங்கள். — திருடன்” என்று எழுதப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








