திருப்பத்தூர் விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறிய அவர், ஒவ்வொரு குடும்பத்திற்கும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், காயமடைந்தோருக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்திருந்தனர். இந்த துயரச் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலை பதிவு செய்துள்ளார்.
“தமிழ்நாடு மாநிலத்தின் சிவகங்கை மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்ததும் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குள் என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதனுடன்,உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு 2 லட்சம் ரூபாய் காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே மாநில அரசு சார்பாக நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பும் திருப்பத்தூர் பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முக்கிய ஆதரவாக இருக்கும்.
உயிரிழந்தோருக்கு அவர் மீண்டும் இரங்கல் தெரிவித்ததோடு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுமென வாழ்த்தியுள்ளார்.








