உலகை உள்ளங்கைக்குள் கொண்டு வரும் கூகுள், அவ்வப்போது பயணர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளது.
அந்த வகையில், தற்போது இணையத்தில் டிரெண்டாகி வரும் ஒரு ட்ரிக்: உங்கள் மொபைல் அல்லது லேப்டாப்பில் 67 என்று டைப் செய்து தேடினால், ஸ்கிரீன் கொஞ்ச நேரத்துக்கு ஊஞ்சல் போல அசைகிறது.
இது வாடிக்கையாளர்களுக்கு கூகுள் வழங்கும் ஒரு சர்ப்ரைஸ் என்பதால், உங்கள் மொபைல் அல்லது லேப்டாப் தானாகவே சுழலுவதை பார்த்து பயப்பட வேண்டாம்.
இது முழுக்க முழுக்க கூகுள் தனது பயணர்களை மகிழ்விக்க உருவாக்கிய ஒரு சிறிய பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே. இதனால் உங்கள் சாதனங்களுக்கு எந்தவிதமான சேதமும் ஏற்படாது.
இந்த அம்சம் கூகுளின் ஈஸ்டர் எக் எனப்படும் மறைக்கப்பட்ட வசதிகளில் ஒரு பகுதியாகும். பயணர்களை மகிழவைக்கும், சிரிக்க வைக்கும் நோக்கில் கூகுள் இத்தகைய அம்சங்களை அவ்வப்போது அறிமுகப்படுத்துகிறது.
சமீப காலமாக, இணையத்தில் “ஆறு ஏழு” என்ற மீம் அதிகமாக பரவியது. அதனை அடிப்படையாக கொண்டு இந்த ஈஸ்டர் எக் அம்சத்தை கூகுள் கொண்டு வந்துள்ளது.
சில வினாடிகளுக்கு பிறகு, ஸ்கிரீன் இயல்பான நிலைக்கு திரும்பிவிடும். இதேபோல், “மொபைல் லேப்டாப் டூ எ பேரல் ரோல்” (“Do a Barrel Roll”) என்று டைப் செய்தால், உங்கள் ஸ்கிரீன் முழுவதும் 360° சுழன்று பழைய நிலைக்கு வரும்.
பார்ப்பதற்கு தொழில்நுட்ப கோளாறு போல தோன்றினாலும், இது கூகுளின் பிரபலமான மற்றும் சுவாரஸ்யமான ஈஸ்டர் எக் அம்சங்களில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.








