புதுக்கோட்டையில், நாய் இழுத்துச் சென்ற பிளாஸ்டிக் பையிலிருந்து பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட மாயாண்டி சாமி தெருவில், குப்பையிலிருந்து நாய் ஒன்று இழுத்துச் சென்ற பிளாஸ்டிக் பையில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் குழந்தை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி, ஓடிச் சென்று குழந்தையை மீட்டுள்ளார்.
பின்னர், இது குறித்து குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், குழந்தையை குப்பையில் வீசி சென்றவர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








