ஈரானில் நாணயத்தின் மதிப்பு வரலாற்றில் காணாத அளவு வீழ்ச்சி அடைந்த நிலையில், நாட்டின் மத்திய வங்கி ஆளுனர் தனது பதவியை ராஜினாமை செய்துள்ளார்.
ஈரான் நாட்டின் நாணயமான ரியால் மதிப்பு சரிவு மற்றும் அதிக பணவீக்கம் காரணமாக போராடி வருகிறது. மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகள் ஈரானிய பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளன.
இதனால் டாலருக்கு எதிராக ரியாலின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை எதிர்கொண்டு வருகிறது. இதனால் ஈரானில் வணிகர்கள், வர்த்தகர்கள், கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் ஈரானின் மத்திய வங்கி ஆளுனர் முகமது ரசா பாசின் தனது பதவியை ராஜினாமை செய்தார். மக்களின் கடும் எதிர்ப்பினால், அவர் பதவி விளகிய நிலையில் அவரது ராஜினாமாவை ஈரான் அதிபர் மசூத் ஏற்றுக்கொண்டார். அவருக்கு பதிலாக முன்னாள் நிதியமைச்சர் அப்துல் நாசர் நியமிக்கப்பட்டுள்ளார்.








