புத்தாண்டை வரவேற்கும் விதமாக, சென்னை காமராஜர் சாலை மணிக்கூண்டில் பூக்களை கொண்டு அலங்கரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
2026 புத்தாண்டை வரவேற்கும் விதமாக, சென்னை மாநகரம் முழுமையாக தயாராக இருக்கிறது. இதற்கு காவல்துறை தரப்பில் வழிப்பட தடைகள் விதிக்கப்பட்டுள்ளன; அதேபோல், பொதுமக்கள் அதிகமாக கூடக்கூடிய இடங்களில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டை கொண்டாடும் விதமாக மணிக்கூண்டு அலங்கரிக்கப்பட்டு, மலர்களால் மற்றும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட காட்சிகளை காணலாம். இதேபோல், இங்கு நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டை வரவேற்க காவல் துறை உயர் அதிகாரியுடன் பொதுமக்கள் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடும் இடமாகவும் இது அமைக்கப்பட்டுள்ளது.
இதனால், புத்தாண்டிற்கு இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அலங்கரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல், காவல்துறை தரப்பிலும் சென்னை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக இன்று இரவும் நாளையும் 19,000 காவலர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், கடற்கரை பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்லக் கூடாது. குறிப்பாக, சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசநகர் கடற்கரை போன்ற பகுதிகளில், இரவு 7:00 மணி முதல் பொதுமக்கள் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு இன்று இரவு தொடங்கி, நாளை காலை 6:00 மணி வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும்.
குறிப்பாக, இந்த பகுதியில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.
மேலும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு ஏற்ப போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. காமராஜர் சாலையில் போரு நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை, இன்று இரவு 8:00 மணி முதல் நாளை காலை 6:00 மணி வரை வாகன போக்குவரத்து நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து மேம்பாலங்களிலும், இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. மெரினா கடற்கரை உள்புற சாலைகளிலும் இன்று இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்து மூடப்படும்.
கொண்டாட்டங்களுக்கான கட்டுப்பாடுகளும் காவல்துறை மூலம் விதிக்கப்பட்டுள்ளன. இன்று மற்றும் நாளை, மெரினா கடற்கரை உட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் இறங்கவோ, குளிக்கவோ கூடாது.
பொதுவாக, குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு வெடிக்க கூடாது எனவும், அடுக்குமாடி குடியிருப்புகளில் புத்தாண்டு நிகழ்ச்சிக்காக ஒழுப்பெருக்கிகள் பயன்படுத்த உரிய அனுமதி பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரவு 9 மணி முதல் சென்னையில் 425 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், கண்காணிப்பு தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
இவ்வாறாக, இன்று இரவு புத்தாண்டை வரவேற்கும் விதமாக, சென்னை மாநகரம் முழுமையாக தயாராக இருக்கின்ற நிலையில், பொதுமக்களுக்கு பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்வதற்கும், அசம்பாவிதங்களை தடுப்பதற்கும் காவல்துறை தீவிர பணியில் ஈடுபட்டுள்ளது.
தற்பொழுது, நாம் இருக்கக்கூடிய மெரினா காமராஜர் சாலையில் மணிக்கூண்டு பூக்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.








