சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.3000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்றும், தொகுப்பு ஊதியம் மற்றும் காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ரூ.1000 பொங்கல் போனஸ் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேபோல், சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள், சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக ரூ.183 கோடி ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3000 மிகை ஊதியம் (பொங்கல் பரிசாக) வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், தொகுப்பு ஊதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2024–25ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணியாற்றி, சில்லறை செலவினத் திட்டத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேர பணியாளர்களுக்கு ரூ.1000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், சி மற்றும் டி பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு பணியாளர்கள் மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பின்படி, சுமார் 9 லட்சத்து 90 ஆயிரம் பணியாளர்கள் மற்றும் பயனாளர்கள் பயனடைய உள்ளனர். இவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதற்காக மொத்தமாக ரூ.183 கோடியே 86 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.








