Home தமிழகம் நீலக்கொடி சான்று பெற்ற மெரினாவில் கடைகளுக்கு முற்றுப்புள்ளி – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

நீலக்கொடி சான்று பெற்ற மெரினாவில் கடைகளுக்கு முற்றுப்புள்ளி – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

சென்னை மெரினா கடற்கரையில் நீலக்கொடி (Blue Flag) சான்று பெற்ற பகுதிகளில் கடைகள் அமைக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், உழைப்பாளர் சிலையின் பின்புறம் உள்ள நிரந்தர கடைகள் அகற்றப்பட வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில், நீலக்கொடி சான்று பெற்ற பகுதிகளில் கடைகள் அமைக்கக் கூடாது என்றும், உணவுப் பொருட்கள் மற்றும் பொம்மை கடைகள் தவிர, வேறு எந்த வகை கடைகளும் அமைக்க அனுமதிக்கக் கூடாது என்றும் உயர் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தற்போது சென்னை மெரினாவில் ஏராளமான கடைகள் இயங்கி வரும் நிலையில், அந்தக் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் 1417 கடைகள் அமைக்கும் திட்டத்தை மறுஆய்வு செய்து, அந்த எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சென்னை மெரினா கடற்கரையில் நீலக்கொடி சான்று பெற்ற பகுதிகளில் கடைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறிய உயர் நீதிமன்றம், “கடற்கரை மக்கள் ரசிப்பதற்கானது; அதை ஷாப்பிங் மாலாக மாற்ற முடியாது” எனக் கருத்து தெரிவித்துள்ளது.

அதாவது, கடற்கரை மக்கள் ரசிக்கத்தானே தவிர, ஷாப்பிங் மாலாக மாற்றுவதற்கல்ல என்றும் நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த அறிவுரைகள் மற்றும் உத்தரவுகளை வழங்கியுள்ளது.