விஜயின் ஜனநாயகன் படம் வெளியீடு, தணிக்கை சான்றிதழ் தொடர்பான பிரச்சினையால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்டபோதிலும், தணிக்கை குழு மேல்முறையீடு செய்திருப்பதால் படம் எப்போது வெளியாகும் என்பது தெரியாத நிலை தற்போது நிலவி வருகிறது.
இந்த விவகாரத்தில் படக்குழு அமைதி காத்து வரும் சூழலில், ஆச்சரியமாக தமிழக காங்கிரஸ் இந்த பிரச்சினையை கையில் எடுத்து, விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கியுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால், காங்கிரஸின் இந்த ஆதரவு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை திமுக ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, காங்கிரஸின் பார்வை தற்போது தவெக பக்கம் திரும்பி இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்தச் சூழலில், ராகுல் காந்தி தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.








