Home தமிழகம் “பொங்கல் விடுமுறை: மெரினாவில் கட்டுப்பாடுகள்”

“பொங்கல் விடுமுறை: மெரினாவில் கட்டுப்பாடுகள்”

பொங்கல் விடுமுறை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் அதிக அளவில் பொதுமக்கள் கூடுவார்கள் என்பதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, இன்று முதல் மெரினா கடற்கரையில் கடலில் இறங்கி குளிப்பதற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடற்கரை முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பொங்கல் விடுமுறை காலத்தில் அதிகளவு மக்கள் கடற்கரைக்கு வரக்கூடும் என்பதால், விபத்துகளைத் தவிர்க்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த தடையாணை அமலில் கொண்டு வரப்பட்டுள்ளது.

பொதுமக்கள் காவல்துறையின் அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.