தமிழ்நாடு அரசு மகளிர் உரிமை தொகை திட்டத்தை நடத்தி வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் பெண்களுக்கு மாதம் தோறும் ₹000 அவர்களுடைய வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. கடந்த மாதம் இந்த திட்டத்தின் இரண்டாவது கட்ட விரிவாக்கம் நடைபெற்றது. அதில் புதிதாக 16,94,339 பெண்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் இந்த திட்டத்தின் பயனாளிகளான பெண்களின் மொத்த எண்ணிக்கை இப்போது 3 கோடி 69,831 ஆக உயர்ந்துள்ளது.
இப்போது, தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், பெண்களுடைய வாக்குகளை பெற திமுக அரசு மகளிர் உரிமை தொகையை உயர்த்த போகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், அமைச்சர் ஐ. பெரியசாமி பொங்கல் முடியும் முன்னர் பெண்களுக்கு ஒரு பொங்கல் பரிசு காத்திருப்பதாக கூறியுள்ளார். இது குறித்து பெண்கள் மத்தியில் பேசியதாகவும், முதல்வர் ஸ்டாலின் பொங்கல் நாளிலோ அல்லது பொங்கல் முடிந்தவழியே பெண்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சர் “பெண்களுக்கு பொங்கல் பரிசு காத்திருக்கிறது” என குறிப்பிட்டதற்கு காரணம், அரசு மகளிர் உரிமை தொகையை அதிகரிக்க முடிவு செய்திருக்கின்றது. இதற்காக இதை பொங்கல் பரிசாக கூறியதாகும்.
வரப்போகும் சட்டமன்ற தேர்தலுக்கு, திமுகக் கையில் உள்ள முக்கிய ஆயுதமாக மகளிர் உரிமை தொகை திட்டம் கருதப்படுகிறது. ஏற்கனவே இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கிறதால், பெண்களுடைய வாக்குகளை முழுமையாக பெற திமுக திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
இதனால் இப்போது இருக்கும் ₹1,000 உரிமை தொகையை ₹1,500 அல்லது ₹2000 ஆக உயர்த்தப் போகும் என பேசப்படுகிறது. இதை அமைச்சர் பெரியசாமி பெண்களுக்கு பொங்கல் பரிசு காத்திருக்கிறது என மறைமுகமாக குறிப்பிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








