Home தமிழகம் கூட்டம் கூட்டமாக வானில் பறக்கும் அதிசயம்… தூத்துக்குடியில் ரோசி ஸ்டார்லிங் வருகை

கூட்டம் கூட்டமாக வானில் பறக்கும் அதிசயம்… தூத்துக்குடியில் ரோசி ஸ்டார்லிங் வருகை

தூத்துக்குடி துறைமுக முகத்துவாரப் பகுதியில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் குவிந்து வருகின்றன. வடமேற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் காணப்படும் ரோசி ஸ்டார்லிங் பறவைகள் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன.

சாதகமான வானிலை மற்றும் போதிய உணவு கிடைப்பதே இந்த பறவைகள் அதிக அளவில் இங்கு வருவதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. கூட்டம் கூட்டமாகக் காணப்படும் ரோசி ஸ்டார்லிங் பறவைகளை உள்ளூர் மக்கள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.