Home தமிழகம் இஸ்லாமியர்களுக்கான 5 பெரிய நலத்திட்டங்கள் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

இஸ்லாமியர்களுக்கான 5 பெரிய நலத்திட்டங்கள் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

கும்பகோணத்தில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இஸ்லாமியர்களுக்காக முக்கியமான புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த மாநாட்டில் ஐந்து முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

முதலாவது அறிவிப்பு:
தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தில் பதிவு பெற்றுள்ள 1537 உலமாக்களுக்கு வழங்கப்பட்டு வந்த 3000 ரூபாய் ஓய்வூதியமும், 44 உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 1500 ரூபாய் குடும்ப ஓய்வூதியமும் இனி உயர்த்தப்படும். இதன்படி, ஓய்வூதியம் 5000 ரூபாயாகவும், குடும்ப ஓய்வூதியம் 2500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.

இரண்டாவது அறிவிப்பு:
உலமாக்கள் நல வாரியத்தின் கீழ், 15–60 வயதுடைய உலமாக்களுக்கு முதல் கட்டமாக ஆயிரம் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கான அரசு மானியத் தொகை, ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 25,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

மூன்றாவது அறிவிப்பு:
ஏற்கனவே சென்னை மற்றும் மதுரையில் வக்ஃப் தீர்ப்பாயங்கள் செயல்பட்டு வரும் நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்திலும் கூடுதலாக ஒரு வக்ஃப் தீர்ப்பாயம் அமைக்கப்படும்.

நான்காவது அறிவிப்பு:
கபரிஸ்தான்கள் மற்றும் கல்லறை தோட்டங்கள் இல்லாத இடங்களில், மாநகராட்சிகளால் அரசு நிலம் தேர்வு செய்யப்பட்டு அவை அமைக்கப்படும்.

ஐந்தாவது அறிவிப்பு:
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உருது மொழி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.