அண்டார்டிகாவின் வைட் வயட்ஸ் (Thwaites) பனிப்பாறை குறித்து விஞ்ஞானிகள் புதிய அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். பனிப்பாறைகள் உடைந்து கடலில் விழும்போது, கடலுக்கடியில் 100 மீட்டர் உயரத்திற்கு ராட்சத ஆழ்கடல் சுனாமிகள் உருவாகும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த அலைகள் ஆழ்கடலில் உள்ள வெப்பமான நீரை மேலே எழுப்பி, பனிப்பாறைகளை அடிப்பகுதியிலிருந்து இன்னும் வேகமாக உருகச் செய்கின்றன.
வைட் வயட்ஸ் பனிப்பாறை மட்டும் முழுமையாக உருகினால் கடல் மட்டம் இரண்டு அடி வரை உயரும். மேலும், மேற்கு அண்டார்டிகாவின் அனைத்து பனிப்பாறைகளும் சிதைக்கப்பட்டால், கடல் மட்டம் 10 அடி வரை உயர வாய்ப்பு உள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் பனிப்பாறை விரிசல்கள் இருமடங்காக அதிகரித்துள்ளன. இது சென்னை, மும்பை போன்ற கடலோர நகரங்களுக்கு பெரும் ஆபத்தாகும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
குறிப்பு: வைட் வயட்ஸ் பனிப்பாறை உலகளவில் “Doomsday Glacier” எனப் பிரபலமானது, ஏனெனில் இதன் உருகுதல் உலகக் கடல் மட்டத்தை முக்கிய அளவுக்கு உயரச் செய்யும் அபாயம் உள்ளது.








