சென்னையில் சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை போலீசில் ஒப்படைத்த தூய்மை பணியாளரை பாராட்டி சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த தூய்மை பணியாளரான பத்மா என்பவர், சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகைகளை போலீசில் ஒப்படைத்தார்.
இவரது நேர்மையைப் பாராட்டி சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. தமிழக அஞ்சல் துறையின் மத்திய கோட்டம், இவரது புகைப்படத்துடன் கூடிய சிறப்பு தபால் தலை ஒன்றை வெளியிட்டு கௌரவித்துள்ளது.
மேலும், மயிலாடுதுறையில் அமெரிக்கவால் ரஜினி ரசிகர்கள் மன்றம் சார்பில் பத்மாவிற்கு 50,000 ரூபாய் வழங்கப்பட்டது.








