ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால், அது ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியத்திலும் ஒரு பெரும் போராக உருவெடுக்கும் என ஈரானின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் யாரையும் முதலில் தாக்காது என்றும், ஆனால் தங்கள் நாட்டின் மீது யாராவது தாக்குதல் நடத்தினால் அல்லது தொந்தரவு கொடுத்தால் அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் அச்சம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழலில், அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது ஒரு பிராந்திய போராக விரிவடையும் அபாயம் இருப்பதாக கமேனி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஈரானில் சமீப காலமாக நடந்த போராட்டங்களை பயன்படுத்தி வெளிநாட்டு சக்திகள் ஈரானின் முக்கிய நிர்வாக அமைப்புகளை சிதைக்க முயன்றதாகவும், அந்த முயற்சிகள் தற்போது முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, பிராந்திய அமைதியை நிலைநாட்ட பல நாடுகள் பேச்சுவார்த்தை வழியிலான தீர்வுகளை வலியுறுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.








