இரவு 10 மணிக்குள் தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள்
இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் மொபைல் மற்றும் டிவியில் நேரம் கழித்து, இரவு 12 மணி அல்லது அதற்கு மேல் தூங்குகிறார்கள். இது உடல் மற்றும் மன நலனில் பல பிரச்சனைகளை உருவாக்குகிறது. இதை தவிர்க்க, இரவு 10 மணிக்குள் தூங்கி விடுவது மிகவும் முக்கியம், அதனால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
ஆராய்ச்சிகள் தெரிவிப்பது என்னவெனில், நேரம் தவறாமல் தூங்குவது நமது இதய மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மாறாக, தாமதமாக தூங்குவது இதய நோய்கள் உருவாகக் காரணமாக உள்ளது.
ஒருவரின் உடலுக்கு குறைந்தது 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்பதால், இரவு 10 மணிக்கு தூங்கி காலை 6 மணிக்கு எழுந்தால், உடற்பயிற்சி செய்து நாளை ஆரம்பிக்க மனமும் உடலும் தயாராக இருக்கும்.
இதயம் மற்றும் ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்கவும், ஆரோக்கியமான தூக்க நேரத்தை கடைபிடிப்பது முக்கியம். குறிப்பாக, ஐரோப்பிய இதய ஆய்வு இதழ் ஒன்று மேற்கொண்ட சமீபத்திய ஆய்வில், இரவு தாமதமாக தூங்குவதால் இதய நோய்கள் உண்டாகும் அபாயம் அதிகரிக்கிறது என தெரியவந்துள்ளது.
மேலும், ஆரோக்கியமான தூக்கம் நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீரான முறையில் வைத்திருக்க உதவும். இரவில் சீக்கிரம் தூங்கினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அத்துடன், இரவில் சீக்கிரம் தூங்குவது உடலில் தேவையற்ற கொழுப்புகளை எரிக்கவும் உதவுகிறது என்பதும் ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன.