Home விளையாட்டு “T20 உலகக்கோப்பை :இந்தியா–பாகிஸ்தான் போட்டி நடக்குமா?”

“T20 உலகக்கோப்பை :இந்தியா–பாகிஸ்தான் போட்டி நடக்குமா?”

டி20 உலகக்கோப்பை தொடரின் விறுவிறுப்பான போட்டிகள் நடப்பதில், வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கான பின்னணி: பாகிஸ்தான் அணி, வங்கதேச அணியை தொடரிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்தும், இந்தியா அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்கவில்லை என்றதாக அறிவித்தது. இதற்கு ஐசிசி கடுமையாக எச்சரித்தது.

ஐசிசி எச்சரிக்கை:

  • இந்தியாவுக்கு எதிராக விளையாடாவிட்டால் பாகிஸ்தான் அணிக்கான நிதி பங்கீடு நிறுத்தப்படும்.
  • பாகிஸ்தான் அணியுடன் இருதரப்பு தொடர் எந்த அணியும் விளையாட முடியாது.
  • பாகிஸ்தான் பிஎஸ்எல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க தேவையான சான்றிதல்கள் வழங்கப்பட மாட்டாது.

இதற்கு பிறகு, பாகிஸ்தான் அணி தனது முடிவிலிருந்து சிறிது பின்வாங்கி, இந்தியாவுக்கு எதிராக விளையாட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், இதற்க்கு மூன்று நிபந்தனைகள் ஐசிசி மற்றும் பிசிசி ஏற்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்று நிபந்தனைகள்:

  1. டி20 உலகக்கோப்பை போட்டி நடக்கும் போது இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை கொடுக்க வேண்டும். முன்னதாக ஆசியர் கோப்பையில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியுடன் கை கொடுக்காமல் புறக்கணித்ததை பாகிஸ்தான் அணிக்குப் பெரும் தலைகுனிவாக இருந்ததாக தெரிவித்துள்ளது.
  2. பாகிஸ்தான் அணியும் இந்தியா இடையிலான இருதரப்பு தொடர்களுக்கு ஐசிசி மற்றும் பிசிசி சம்மதம் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் பொதுவான இடங்களில் போட்டிகளை நடத்தலாம்.
  3. பாகிஸ்தான் வளர்ந்து வரும் கிரிக்கெட் நாடாக இருப்பதால், ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் வருவாயை அதிகரிக்கும் வகையில் உதவ வேண்டும்.

இந்த மூன்று நிபந்தனைகளையும் ஏற்றால், பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதாகவும், இந்நிலையில் பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப்படுகிறது.