தமிழக காவல் துறையின் சட்டம் ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவால் நாளை பணி ஓய்வு பெற உள்ளார். நாளை அவர் பணி ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய டிஜிபி தற்போதுவரை நியமிக்கப்படவில்லை.
தமிழக காவல்துறை படைத்தலைவர் மற்றும் சட்ட ஒழுங்கு டிஜிபியாக பணி புரியும் சங்கர் ஜிவால் அவர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இவருக்கான பிரிவு உபசரிப்பு நிகழ்ச்சி நாளை மாலை நாலு மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியமில் நடைபெற இருக்கிறது.
சங்கர் ஜிவால் ஓய்வு பெற உள்ளதால் புதிய சட்டமன்ற டிஜிபியை தேர்வு செய்ய மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியல் டிஜிபி தயாரிக்கப்பட்டு முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதில் 11 அதிகாரியின் பெயர்கள் இடம் பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இதுவரை அந்த பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என்றும் தகவல்கள் கிடைக்கப்பட்டிருக்கின்றன. இதனால தற்போது டிஜிபி அலுவலகத்தில் நிர்வாக பிரிவு டிஜிபியாக பணியாற்றி வரும் வெங்கட்ராமன் அவர்கள் பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கடந்த 1994 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகரான இவர் சைபர் குற்றப்பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளை பணியாற்றி அனுபவம் பெற்றவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த டிஜிபி யார் என்ற ஒரு தகவல்கள் எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் கிடைக்கப்பட்டிருக்கின்றன.
தமிழக காவல் நிர்வாகி டிஜிபியாக உள்ளவெங்கட்ராமன்சட்டம் ஒழுங்கு கூடுதலாக கவனிப்பார் என்ற தகவலும் கிடைக்கப்பட்டிருக்கின்றன.சட்டம் ஒழுங்கு டிஜிபி பணி கூடுதலாக வெங்கட்ராமன் வழங்கப்படுவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சுமார் ஒன்பது வருடங்களுக்கு பிறகு சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவி வெங்கட்ராமன் அவர்களுக்கு கூடுதலாக வழங்கப்படும் என்றும் தகவலானது கிடைக்கப்பட்டிருக்கிறது.இதன் அடிப்படையில புதிய டிஜிபியாக வெங்கட்ராமனுக்கு கூடுதல் பொறுப்பை தமிழக அரசு வழங்குவதற்கான முடிவை எடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது








