வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எல்லா கட்சிகளுக்கும் தாவேக்கா பாதிப்பை ஏற்படுத்தும் என அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
தஞ்சையில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட அவர் தம்பதிகளை வாழ்த்தி திருமணத்தை நடத்தி வைத்தார்.
பின்னர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 75 ஆண்டு கட்சிக்கும் 50 ஆண்டு கால கட்சிக்கும் இணையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
வருகிற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உறுதியாக முத்திரை பதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு தேர்தலின் போது விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்றும் அதுபோல் வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் எல்லா கட்சிகளுக்கும் தாவேக்கா பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளார்.








