நாமக்களை சேர்ந்த ஒரு சிறுவன் நான்கு வயதிலிருந்து மாடலிங் மற்றும் ஃபேஷன் ஷோவில் கலக்கி வருகிறார். நாமக்கல் மாவட்டம் பொம்மை குட்டைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சதீஷ் பாபு, மிதுனா தம்பதியினர். இந்த தம்பதிகினருக்கு ஹர்ஷித்ரோஷன், சாரா, சானா என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
தம்பதியினருக்கு மாடலிங் மற்றும் ஃபேஷன் ஷோ என்றால் ஆர்வம் அதிகம். இதன் காரணமாக தங்களது மகன் ஹர்ஷித் ரோஷனுக்கு விதவிதமான ஆடைகளை அணிந்து தம்பதியினர் அழுகு பார்த்துள்ளனர். தொடர்ந்து தம்பதியினர் இருவரும் இணைந்து மாடலிங் மற்றும்ஃபேஷன் ஷோ குறித்து ஹர்ஷித் ரோஷனுக்கு பயிற்சி அளித்து வந்துள்ளனர்.
நான்கு வயதில் இருந்து ஹர்ஷித் ரோஷனை பல்வேறு ஃபேஷன் ஷோ போட்டிகளில் கலந்து கொள்ள வைத்துள்ளனர். அவ்வாறு போட்டிகளில் கலந்து கொண்டு ஏரளமான பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.
தற்போது நான்காம் வகுப்பு படித்து வரும் ஹர்ஷித் ரோஷன் கோவாவில் எம் யுனிவர்ஸ் இன்டர்நேஷனல் யாஷ் இன்டர்நேஷனல் ஃபேஷன் வீக் ஆகிய அமைப்புகள் இணைந்து மினி மிஸ்டர் யூனிவர்ஸ் 2025 என்ற தலைப்பில் ஃபேஷன் ஷோவை நடத்தியது.
இதில் சீனா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட 24 நாடுகளில்லிருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஹர்ஷித் ரோஷன் 12 வயதுக்கு உட்பட்ட போட்டியில் கலந்து கொண்டு மினி மிஸ்டர் யுனிவர்ஸ் 2025 பட்டத்தை வென்றார்.








