Home தமிழகம் ” அதிர்ச்சியில் ” ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள்:

” அதிர்ச்சியில் ” ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்கள்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க தமிழ்நாடு சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுசூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓஎன்ஜிசி எனப்படும் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் கடந்த 2023ல் விண்ணப்பித்தது.

இதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க கூடாது என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.இநிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 ஹைட்ரோகார்பன் கிணறுகளை அமைக்க ஓஎன்ஜிசிக்கு தமிழ்நாடு சுற்று சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

காவனூர் காமன் கோட்டை, சிறுவயல், ஏ மாடக்குடி, சீனங்குடி, அழகர்தேவன், வேப்பங்குளம் உள்ளிட்ட 20 கிராமங்களில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் விவசாயம் முற்றிலும் அழியும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

20 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் தோண்ட அனுமதி அளித்திருப்பது உள்ளபடியே ராமநாதபுரம் மாவட்ட பொதுமக்களை அதிர்ச்சியில் உரைந்து இருக்கிறாகள்.

தமிழ்நாடு அரசாங்கம் உடனடியாக இந்த அனுமதியை அனுமதிக்கான உத்தரவை ரத்து செய்யாவிட்டால் மிகப்பெரிய அளவிலே மக்கள் சுழல் போராட்டம் நடத்துவோம் என்று தமிழர் அதிகாரத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.

மாநில அரசு அதற்கு உடந்தையாக இருக்கிறது. ஏற்கனவே ராமநாதர் மாவட்டம் ஒரு வளர்ச்சியான மாவட்டம். அந்த மாவட்டத்தில் நிலத்தடி நீர் கிடைப்பதே அரிதாக இருக்கிறது.