Home தமிழகம் “சட்டக் காவலரே சிறைக்குள் – காஞ்சிபுரம் நீதிமன்ற அதிரடி தீர்ப்பு”

“சட்டக் காவலரே சிறைக்குள் – காஞ்சிபுரம் நீதிமன்ற அதிரடி தீர்ப்பு”

காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை வரும் 22-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே பூசிவாக்கம் பகுதியில் உள்ள பேக்கரியில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு இரு தரப்பினருக்கிடையே சண்டை ஏற்பட்டது. அந்த சண்டையில் காவல்துறை ஒருதலைப்பட்சமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை மாவட்ட நீதிமன்றம் நேரடியாக விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

இந்த விசாரணையில், நீதிபதி செம்மல் அவர்கள் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் ஒருதலை பட்சமாக செயல்பட்டதாக கண்டறிந்ததால், டிஎஸ்பி சங்கர் கணேஷைக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் தண்டனை விதித்தார்.

டிஎஸ்பியை சிறைக்கு அழைத்துச் செல்லும் போது சில காவல்துறை அதிகாரிகள் தடை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து நீதிமன்ற வாகனத்தில் அழைத்துச் செல்ல உத்தரவிடப்பட்டது. அப்போது வழக்கறிஞர்களும் நீதிபதிக்கு ஆதரவாக கூடியதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

பின்னர், நீதிமன்ற உத்தரவின்படி காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர்கணேஷை, காஞ்சிபுரம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் காரணமாக நீதிமன்றம் மற்றும் காவல்துறை இடையே பதட்டம் உருவாகியுள்ளது. தற்போது அந்தப் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நீதிமன்ற உத்தரவை மீறுபவர்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி எச்சரித்துள்ளார்.