திருப்பூர் மாவட்டம் மூத்துக்குடி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை குண்டுக்கட்டாக காவல் துறை அப்புறப்படுத்தி இருக்கிறது.
திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை வெள்ளியம்பாளையம் பாறைக்குழி பகுதிகளில் கொட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாநகராட்சிக்கு எதிராக உத்துக்குளி சாலையில் மறியலில் ஈடுபட்ட வெள்ளையம்பாளையம் பொதுமக்கள் குண்டுக்கட்டாக அகற்றப்பட்டிருக்கிறார்கள்.
மறியல் காரணமாக ஒத்துக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.
போராட்டக்காரர்களை போலீசார் அப்புறப்படுத்தி இருக்கிறார்கள். திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே வெள்ளியம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழியில் மாநகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டுவதற்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நேரம் சாலைமறையில் ஈடுபட்டனர்.
சாலைமறில் ஈடுபட்ட போராட்டகாரர்கள் கைவிடாமல் இருந்ததால் போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டம் முரட்டுப்பாளையம் ஊராட்சி வெள்ளியம்பாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழி யில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை இன்று கொட்டுவதற்காக மாநகராட்சி சார்பில் குப்பைகள் அருகில் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் குப்பைகள் அந்த பாறைக்குழி பகுதியில் கொட்டுவதால் அப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர் பாதித்து விவசாயம் பெருமளவில் நடக்கும் . அதனால் இந்த பகுதியில் பாதிப்பு ஏற்படும் என கூறி வெள்ளியம்பாளையம் பகுதியில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலையிலிருந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.ஆனால் அவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட மறுத்ததால் ஊத்துக்குள்ளி போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஆண்கள் என அனைவரையும் குண்டுகட்டாக தூக்கி சென்று கைது செய்தனர்.
மேலும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்கு உண்டான முறையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். என வலியுறுத்தினர்.








