மேற்கு திசை காற்றுடைய வேக மாறுபாடு காரணமா 31 மற்றும் 1 இந்த தேதிகளில் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானதிலிருந்து மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும்னும் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40லிருந்து 50 km வேகத்திலும் வீசக்கூடும்னும் தெரிவிக்கப்பட்டிருக்கு.
அதே மாதிரி இரண்டு, மூன்று, நான்கு, ஜந்து,ஆறு இந்த நாலு நாட்களும் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானதிலிருந்து மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும்னு கணிக்கப்பட்டிருக்கு.
31 ஆம் தேதி தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 லிருந்து 3°செ வரை படிப்படியா உயரக்கூடும்னு வானிலை மையம் கணிச்சிருக்கு.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமுட்டத்துடன் காணப்படும்னும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யறதுக்கு வாய்ப்பு இருக்கிறதாகவும் வானிலை மையம் கணிச்சிருக்கு.
அதிகபட்ச வெப்பநிலை 37°செ குறைந்தபட்ச வெப்பநிலை 28°செ இருக்கக்கூடும்னு தெரிவிக்கப்பட்டிருக்கு . மீனவர்களுக்கு என்ன எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கு . தமிழக கடலோர பகுதிகளை பொறுத்தவரைக்கும் மன்னார் வலைகுடா, குமரிக்கடல் பகுதிகள் அதே மாதிரி ஆந்திர கடலோர பகுதிகள்.
மத்திய தெற்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், மத்திய மேற்கு அதை ஒட்டிய தென்மேற்கு அரபி கடல் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகள், தெற்கு குஜராத், கொங்கன், கோவா, கர்நாடகா, கடலோர பகுதிகள்.
அதை ஒட்டி இருக்கக்கூடிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகள் அதை ஒட்டி இருக்கக்கூடிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள்.
இந்த அரபிக்கடல் வங்கக்கடல் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் அப்படிங்கறதுனால இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க போக வேண்டாம் அப்படின்னு அறிவுறுத்தப்பட்டிருக்காங்க.
கடைசி 24 மணிநேரத்தில் என்ன மாதிரியான வானிலை நிலவுச்சு அப்படிங்கறதையும் வானிலை மையம் அறிக்கையா கொடுத்திருக்கு. அந்த வகையில் தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகத்தில ஒரு சில இடங்களிலும் மழை பெய்ந்ததாகவும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவுதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுருக்கு.
அதிகபட்சமா கோயம்புத்தூர் மாவட்டத்துடைய வாழ்பாறை பிடிஓலையும் சின்கோனா, சின்னக்கல்லார் இந்த பகுதிகளிலும் தலா 4 cm அளவுக்கு மழையின் அளவு பதிவாயிருக்கு.
அதே மாதிரி மதுரை விமான நிலையத்தில 40.5°செ வெப்பம் பதிவான நிலையில் அது அதிகபட்ச வெப்பநிலையாவும் கரூர் பரமத்தியில் 21.5°ச 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவான நிலையில் அது குறைந்தபட்ச வெப்பநிலையாகவும் கருதப்படுகிறது.








