தீபாவளி பண்டிகைகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கியது.
தீபாவளி பண்டிகைகளுக்கான ரயில் டிக்கெட் பதிவானது சற்று முன்னதாக தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இன்று காலை சரியாக 8 மணிக்கு தொடங்கப்பட்ட முன்பதிவானது தீபாவளி பண்டிகைகளுக்கான ஒரு பிரத்தியேக முன்பதிவாகவே கருதப்படுகிறது.
தென் மாவட்டங்களுக்கு தீபாவளி பண்டிகை கொண்டாட செல்பவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும், அதேபோல் அக்டோபர் 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கான முன்பதிவு டிக்கெட்டானது இன்று காலை 8 மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
காலை 8:00 மணி அளவில் தொடங்கப்பட்ட இந்த முன்பதிவானது ஆன்லைன் மேல் அதிக அளவு முன்பதிவு செய்பவர்களினுடைய ஆர்வம் அதிகமாக இருப்பதாகவும், வழக்கம் போல் பல்வேறு காலகட்டங்களில் அதற்கு நேரடியாக சென்று கவுண்டர்களில் முன்பதிவு செய்பவர்களுடைய கூட்டம் ரயில் பயணியில் உள்ள கூட்டம் குறைவாக இருப்பதாகவுமே தகவல் வெளியாகி இருக்கிறது.
அந்த வகையில் அக்டோபர் 20 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அதற்கான முன்பதிவானது இன்று காலை சரியாக 8 மணிக்கு துவங்கி அதாவது 60 நாட்கள் முன்னதாக இந்த பதிவானது தொடங்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பில் நேற்று அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
60 நாட்களுக்கு முன்னதாக இந்த ரயில் பயணத்திற்கான பதிவை மேற்கொள்ளுமாறும் அதேபோல் கடைசி நேரத்தில் ரயில் டிக்கெட் கூட்ட நெரிச்சலை தவிர்ப்பதற்காக முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கான பயணங்களை மேற்கொள்ள வேண்டும்.
எனவும் தெற்கு ரயில்வே சார்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டிருந்த நிலையில் தீபாவளி பண்டிகளுக்கான ரயில் முன்பதிவு டிக்கெட் பதிவானது சற்று முன்னதாக துவங்கியது.








