உடுமலைப்பேட்டை நகர் பகுதிகளில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் ரோடு ஷோ கலந்து கொண்டார். பின்னர் திருப்பூர் பகுதியில் 1426 கோடியில் 19785 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பணிகளை துவக்கி வைக்கிறார் முதலமைச்சர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நேதாஜி மைதானத்தில் இன்று நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்கள் துறை ,ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வளத்துறை, ,பேரூராட்சிகள் துறை ,தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை, வனத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை உள்ளிட்ட திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வளங்களல் துறை, ஊரக வளர்ச்சி நல்வாழ்வு துறை வேளாண்மை துறை, பேரூராட்சிகள் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.
இதனை தொடர்ந்து வருவாய் துறை சார்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், ஊராட்சி துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்ல ஆணைகள், மகளிர் திட்டம், தோட்ட கலைத்துறை ,தொழிலாளர் நலத்துறை மாற்று திறனாளிகள் நலத்துறை மற்றும் மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 1426 கோடி மதிப்பீட்டில் 19885 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளது .








