Home தமிழகம் “இரவு பகலாக உற்பத்தி… ஆயுத பூஜை சந்தை சூடு பிடிக்குது!”

“இரவு பகலாக உற்பத்தி… ஆயுத பூஜை சந்தை சூடு பிடிக்குது!”

“ஆயுத பூஜையை முன்னிட்டு புதுக்கோட்டையில் பொறி உற்பத்தி பணிகள் இரவு பகலாக மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அக்டோபர் 1 ஆம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்த விழாவின் முக்கிய பொருளான பொறி தயாரிப்பு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வேகமெடுத்து வருகிறது.

புதுக்கோட்டை ராஜவீதியில் உள்ள தயாரிப்பு கூடங்களில், இயந்திரம் மூலம் தயாரிக்கப்படும் பொறி — உள்ளூர் மட்டுமல்லாமல் பல்வேறு ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

உற்பத்தியாளர்கள் கூறுவதாவது மழை பெய்தாலும், பகலில் வெயில் சூடாக இருந்ததால் தயாரிப்பு பணிகள் எந்த பாதிப்பும் இல்லாமல் நல்லா நடக்குது. போன வருடம் 8,000 மூட்டைகள் தயாரிச்சோம். இந்த வருடம் ஏற்கனவே 10,000 மூட்டைகளைத் தாண்டி விட்டோம். விற்பனை மிகச் சிறப்பா இருக்கு!’ எனத் தெரிவித்தனர்.

மேலும், அரிசி பொறிக்கு ஜிஎஸ்டி இல்லாத காரணத்தால், விலை சாதாரணமாகவே உள்ளது. திருச்சி, புதுக்கோட்டை, கீரனூர் போன்ற பகுதிகளில் இருந்து நேரடியாக வந்து மக்கள் கொள்முதல் செய்து செல்கிறார்கள்.

விலைகள் குறித்து உற்பத்தியாளர்கள் கூறுவதாவது மூப்பொருட்களின் விலை உயர்வு, தொழிலாளர் கூலி உயர்வு ஆகியவற்றால், 6 கிலோ எடை கொண்ட ஒரு பொறி மூட்டை கடந்தாண்டு 380 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 420 ரூபாய்க்கு உயர்ந்துள்ளது.

சுத்தமான சுகாதார முறையிலேயே தயாரிப்பு செய்யப்படுவதாகவும், அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பாக விநியோகம் நடைபெற்று வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு 9,000 மூட்டைகள் விற்பனையாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஏற்கனவே 12,000 மூட்டைகள் வரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

ஆயுத பூஜையை முன்னிட்டு புதுக்கோட்டையில் பொறி விற்பனை களைகட்டும் சூழல் உருவாகியுள்ளது.”