ஓடும் பேருந்தில் தங்க நகை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக பெண் ஊராட்சி மன்ற தலைவர் பாரதியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் நரியம்பட்டு ஊராட்சி மன்ற தலைவி பாரதி கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால் திமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்








