Home தமிழகம் கேரள சுற்றுலா வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து :

கேரள சுற்றுலா வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து :

கொடைக்கானலில் பிரபல சுற்றலா தளமான அப்பர் லேக் வியூ பகுதியில் கேரள சுற்றுலா வாகனம் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

கொடைக்கானல் என்பது ஒரு மிகப்பெரிய சுற்றுலா தளமாக இருந்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் விருப்பப்படக்கூடிய ஒரு இடமாகவும் கொடைக்கானல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தான் கொடைக்கானலில் மாலையிலிருந்து அதாவது மதிய நேரத்திலிருந்தே தொடர்ந்து சாரல் மழை மற்றும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் சாலையில் பல்வேறு இடங்களில் அந்த மழை தண்ணீரானது ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக கொடைக்கானல் அருகே இருக்கக்கூடிய இந்த பிரபல சுற்றுலா தளமாக இருக்கக்கூடிய அப்பர் லேக் வியூ பகுதியில் கேரளா மாநிலம் பாலக்காட்டில் இருந்து வந்திருக்கக்கூடிய அந்த சுற்றுலா வாகனம் என்பது தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது.

இந்த விபத்தில் கேரளாவில் வந்து இருந்து வந்திருக்கக்கூடிய ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் படுகாயம் அடைந்திருக்கிறார்கள். தற்போது அவர்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மேலும் இதுபோன்ற மலைதளங்களில் அதிக அளவில் வேக தடைகளை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் நீண்ட காலமாக இருந்து வருகிறது.