Home தமிழகம் “மீண்டும் சொத்து குவிப்பு சர்ச்சை – சிபிஐக்கு உயர் நீதிமன்றம் கடும் உத்தரவு!”

“மீண்டும் சொத்து குவிப்பு சர்ச்சை – சிபிஐக்கு உயர் நீதிமன்றம் கடும் உத்தரவு!”

ராமநாதபுரம் தொகுதி எம்.பி நவாஸ்கனிக்கு எதிரான சொத்து குவிப்பு புகாரில் விசாரணை நடத்த கூறி மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு வாரத்திற்குள் சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

நவாஸ்கனி வருமானத்திற்கு அதிகமாக ₹23.58 கோடி சொத்து குவித்ததாகவும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புகார் அளித்தும் சிபிஐ நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில் இது குறித்து சிபிஐ பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.