போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கைதி தப்பியோடிய நிலையில் குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
போக்சோ வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற தண்டனை கைதி பேருந்தில்லிருந்து குதித்து தப்பி ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
படுக்கை வசதி கொண்ட பேருந்தில் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திவிட்டு புழல்சிறையில் அடைக்க அழைத்து வந்தபோது போலீசாருக்கு தெரியாமல் பேருந்திலிருந்து குதித்து தப்பி ஓடி இருக்கிறார்.
பாண்டிச்சேரியை சேர்ந்த ஹமீது அப்துல் காதர் வயது 23 இவர் செங்கல்பட்டு காவல் நிலையத்திற்கு உட்பட்ட இடத்தில் போக்ச வழக்கில் கைதாகி செங்கல்பட்டு அமர்வு சிறப்பு நீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹமீதுக்கு ஆயுள் தண்டணை வழங்கியது.
இதனால் புழல் சிறையில் ஹமீது அடைக்கப்பட்டிருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு பாண்டிச்சேரி பதிவு செய்துள்ள போக்ச வழக்கு ஒன்றில் பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக புழல் சிறையிலிருந்து ஹமீதை பேருந்து மூலமாக போலீசார் அழைத்து நேற்று மதியம் பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருக்கிறார்கள்.
ஆஜர்படுத்திய பின்னர் குற்றவாளி ஹமீதை புழல்சிறையில் அடைப்பதற்காக படுக்கை வசதி கொண்ட பேருந்தில் அவரை அழைத்து வரும்போது திருவான்மியூர் அருகே போலீசாருக்கு தெரியாமல் நல்லிரவு நேரத்தில் பேருந்தில் இருந்து குதித்து தப்பி ஓடிக்கிறார்.
இதனை கண்டு ஆயுதப்படை போலீசார் அங்குள்ள பகுதியில் தேடிய போது ஹமித் காணாமல் போனதால திருவான்மியூர் காவல் நிலையத்தில புகார் அழித்திருக்கிறார்கள்.
புகாரின் பெயரில் திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஒடிய போக்ச குற்றவாளியை தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும் காவலர் மீதும் துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.








