நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கந்துவட்டி கொடுமை மற்றும் தனியார் மைக்ரோ நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக விசைத்தறி கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமராபாளையம் பகுதிகளில் கந்துவட்டி கொடுமை மற்றும் மைக்ரோ நிதி நிறுவனங்களில் வாங்கிய பணத்தின் நெருக்கடி காரணமாக தற்போது விசைதறி கூலி தொழிலாளி ஒருவர் வீட்டில் தூக்கிட்டு தற்போது தற்கொலை செய்து கொண்டார்.
மேலும் குமராபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் குமராபாளையம் பகுதியை சேர்ந்தவர் விசைத்தறி தொழிலாளியான நாகராஜ்.
இவருக்கு ஒரு மனைவி மற்றும் ஆறு வயது மற்றும் மூன்று வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். தொடர்ந்து இவர் விசைத்தறி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் குடும்பத்தினுடைய சூழ்நிலை கருதி குமராபாளையம் மற்றும் பள்ளிப்பாளையம் பகுதியில் இருக்கின்ற தனியார் கந்து வட்டிக்காரர்கள் மற்றும் தனியார் நிதி நிறுவனமான மைக்ரோ நிதி நிறுவனங்களில் சுமார் ₹ 1 லட்சத்த50,000 ரூபாய் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து கந்து வட்டிக்காரர்கள் அவர்கள் கொடுத்த பணத்தை தவிர மேலும் வட்டிகளை அதிகமாக கேட்டு தொந்தரவு செய்ததாகவும் அதே சமயத்தில் மைக்ரோ பைனான்ஸ் உடைய ஊழியர்கள் தொடர்ந்து தொலைபேசி மூலமாக மிரட்டல்கள் விடித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டினுடைய அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் பிரேதத்தை கைப்பற்றிய குமராபாளையம் போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தன்னுடைய கணவருடைய இறப்பிற்கு கந்து வட்டிகாரர்கள் மற்றும் மைக்ரோ பைனான்ஸ் உடைய ஊழியர்கள் எல்லாம் காரணம் என இறந்த நாகராஜினுடையமனைவி தற்போது குமராபாளையம் காவல் நிலத்தில் புகார் என்பது அழித்துள்ளார்.
தொடர்ந்து பள்ளிப்பாளையம் மற்றும் குமராபாளையம் பகுதிகளை தொடர்ந்து கந்துவட்டி மற்றும் மைக்ரோ பைனான்ஸ் காரணமாக தொடர் உயிரிழப்பு ஏற்படுத்தி வருவதாகவும் தொடர்ந்து அதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.








