கடலூர் அருகே பேருந்தில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவர்களை நீதிபதி எச்சரித்தார்.
கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் அரசு பேருந்தில் ஏராளமான மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்தனர்.
அப்போது அவ்வழியாக சென்ற விருதாச்சலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி தனது இருசக்கர வாகனத்தை பேருந்தின் முன்பு நிறுத்தினார்.
இதை அடுத்து ஆபத்தான முறையில் படியில் தொங்கிக் கொண்டிருந்த மாணவர்கள் அனைவரையும் கீழே இறங்க சொல்லி அவர்களுக்கு அறிவுயுரைகளை வழங்கினார்.
மேலும் மாணவர்களை கட்டுப்படுத்த தவறிய ஓட்டுனர் மற்றும் நடத்துனரையும் எச்சரித்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.








