Home தமிழகம் “பூந்தமல்லி அரசு பள்ளி குளமாக மாறியது – வகுப்பறை அடைய முடியாமல் மாணவர்கள் அவதி”

“பூந்தமல்லி அரசு பள்ளி குளமாக மாறியது – வகுப்பறை அடைய முடியாமல் மாணவர்கள் அவதி”

சென்னை பூந்தமல்லியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு பள்ளியில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளதால் மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர். சென்னை பூந்தமல்லி அறிஞர் அண்ணா அரசு பள்ளி மேல்நிலை பள்ளியாக இயங்கி வருகிறது.

இங்கு ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு பெய்த கனமழையால் அங்கு உள்ள பள்ளி வளாகத்திலும் மைதானத்திலும் குளம் போல மழைநீரானது தேங்கி உள்ளது.

இதனால் பள்ளிக்கு காலையில் வருகை தந்த மாணவர்கள் வகுப்பறைகளுக்கு செல்ல முடியாமல் அவதியுற்றனர் ,அங்கு தேங்கி இருக்கும் தண்ணீர் இன்னும் சிறிது நேரத்தில் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையில் இருக்கிறது.

இது தொடர்பாக புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டிருந்தது ஆசிரியர் தரப்பில், அதன் பின்னர் தற்போது நகராட்சி நிர்வாகம் தரப்பில் மின்மோட்டார்களை வைத்து அந்த நீரை அகற்றும் பணியானது தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்த பிறகு, அடுத்து வரக்கூடிய மழைக்காலங்களில் இதுபோன்று தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் தரப்பிலும் ,அவர்களது பெற்றோர்கள் தரப்பிலும், ஆசிரியர்கள் தரப்பிலும் ,கோரிக்கையானது முன்வைக்கப்பட்டுள்ளது.