ராமேஸ்வரம் பஜார் பகுதியில் தனியார் தங்கும் விடுதிகளில் மர்ம நபர் புகுந்து சுற்றுலா பயணிகள், ஊழியர்களின் செல்போன், பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி வருகிறார்.
நேற்று முன்தினம் நடந்த சம்பவத்தில், விடுதிக்குள் புகுந்த மர்ம நபர் இரண்டு செல்போன்கள் மற்றும் பணத்தை திருடிச் செல்வது சிசிடிவியில் பதிவாகி, காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இதையடுத்து பொதுமக்கள் அச்சமடைந்து, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர் ஒரு நல்ல தலைப்பு








