தவெக தலைவர் விஜய் தனது கட்சியின் இரண்டாவது மாநாட்டை கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி மதுரையில் நடத்தினார். அந்த மாநாட்டில் திமுக அதிமுக பாஜக கட்சிகளை விஜய் விமர்சித்து பேசியது பெரும் பேசும் பொருளானது.
அதிலும் குறிப்பாக ஸ்டாலின் அங்கிள் ராங் அங்கிள் என்று முதலமைச்சர் ஸ்டாலினை அவர் பேசி இருந்தார். அவரின் இந்த பேச்சிற்கு சீமான், அண்ணாமலை உள்ளிட்ட சில அரசியல்வாதிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் கே.எஸ் ரவிகுமார் அரசியலில் எனக்கு சம்பந்தம் கிடையாது. எனக்கு அனுபவமும் கிடையாது. விஜய் பேசுவது தப்பா யாருக்கும் எனக்கு படல. ஏன்னா அவரை நிஜமாவே நேர்ல பார்க்கும்போது குட் மார்னிங் அங்கள் வணக்கம் எப்படி இருக்கீங்க அப்படின்னுதான் சொல்லுவாரு.
அதை வைத்து இன்னைக்கு பப்ளிக்ல சொல்லிருக்காரு. அப்படித்தான் நான் பார்கிறேன். அதற்கு வேறு மீனிங் எடுத்துக்கிட்டு வேற மாதிரி ஒரு குரூப் வந்து பேசிக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கெல்லாம் நான் சொல்றேன். அதை விடுங்க. மத்தபடி நாட்டுக்கு என்ன நல்லதோ அதை எப்படி பண்ணனுமோ அதை பண்ணா ஓகே. அது யாரா இருந்தாலும் சரி.
ரெட் ஜெயண்ட்டுக்கு இரண்டு படம் பண்ணிருக்கேன். அந்த நேரத்துல எல்லாம் ஸ்டாலின் சார் டெப்யூட்டி சி.எம் மா இருந்தாரு. அவர் வந்து படம் பார்ப்பாரு. நான் நிறைய தடவை மீட் பண்ணிருக்கேன். அவங்க வீட்டுக்கு நிறைய தடவையும் போயிருக்கேன். நானே வணக்கம் அங்கிள் தான் சொல்லுவேன். ஆண்டி எப்படி இருக்காங்க அப்படின்னுதான் கேட்பேன். அது தப்பான வார்த்தையே கிடையாது.
அங்க ஃபுல்லா அவரோட கூட்டம்தான். அந்த கூட்டத்துக்கு ஜாலி பண்றதுக்காக அப்படி பேசி இருக்கலாம். அப்படி பேசுனதாதான் நான் நினைக்கிறேன். அவரு வந்து தப்பா ஒருத்தரை குறை சொல்லல. அது குறை சொல்ற வார்த்தையும் கிடையாது. இப்ப அவரை அங்கிள்னு கூப்பிடுறாரா? அதுல என்ன தப்பு இருக்கு? அதுல ஒன்னும் தப்பே கிடையாது. தமிழில் மாமான்னு கூப்பிட்டாதான் அது தப்பா இருக்கும். அப்படி ஒன்னும் அவரை கூப்பிடலையே என்று கேஎஸ் ரவிகுமார் கூறியுள்ளார்.








