Home தமிழகம் ”தூய்மை பணியாளர் செய்த செயல் – இன்பதிர்ச்சி கொடுத்த முதல்வர்..

”தூய்மை பணியாளர் செய்த செயல் – இன்பதிர்ச்சி கொடுத்த முதல்வர்..

சென்னையில் சாலையில் கிடந்த 45 சவரன் நகைகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கி பாராட்டினார்.

பெருநகர சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர் பத்மா நேற்று சென்னை தியாகராயநகர் வண்டிக்காரன் சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது 45 சவரன் தங்க நகைகளை கண்டெடுத்த அவர் உடனடியாக பாண்டிபஜார் காவல் நிலையத்தில் அதனை ஒப்படைத்தார்.

பிறருக்கு முன்மாதிரியாக திகழும் தூய்மை பணியாளர் பத்மாவை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்தினார்.

பத்மாவிற்கு சால்வை அணிவித்து சிறப்பித்த முதலமைச்சர் ஒரு லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கி அவரின் நேர்மையை பாராட்டினார்.