Home தமிழகம் ” ஓரணியில் தமிழ்நாடு ’’ உடன்பிறப்பே வா!

” ஓரணியில் தமிழ்நாடு ’’ உடன்பிறப்பே வா!

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் வந்து திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டமானது அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவலானது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் திமுக தரப்பில் கட்சியினரிடம் இருந்து பிரச்சாரம் தொடங்கப்பட்டிருக்கிறது.

குறிப்பாக உடன்பிறப்பே வா என்ற பிரச்சாரம் மூலமாக தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சந்தித்து வருகிறார். மேலும் தமிழ்நாடு முழுவதும் ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பு மூலமாக புதிய உறுப்பினர்களை திமுக சேர்த்து வருகிறது.

குறிப்பாக ஒவ்வொரு பூத்திலும் 30% உறுப்பினரை திமுக-வில் சேர்க்க வேண்டும் எனவும் ,அதனை 40%ஆக உயர்த்தி முதலமைச்சர் அறிவித்திருந்த நிலையில் உப்பனையில் தமிழ்நாடு பிரச்சாரம் வந்து வரும் 15ஆம் தேதியுடன் முடிவடைய இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த நிலையில் வந்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டமானது திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் தலைமையில் வந்து தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருக்கக்கூடிய கலைஞர் அரங்கில் வந்து நடைபெற்று வருகிறது.

திமுக வை சேர்ந்த அனைத்து மாவட்ட செயலாளர்கள் முக்கிய நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். இந்த கூட்டத்தை பொறுத்தவரையில் முக்கியமாக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கட்சியான திமுக தயாராகி வரக்கூடிய நிலையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுக உறுப்பினர் பணியை வந்து மேற்கொண்டு வருகிறது.

இந்த கூட்டத்தை பொறுத்தவரையில் இதுவரை இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்கள் வந்து திமுக – வில் சேர்ந்திருப்பதாக தகவலானது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் உறுப்பினர் சேர்க்கை பணியின் அடுத்த கட்ட நிலவரங்கள் குறித்து இன்று நடைபெற்று வரக்கூடிய இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிப்பதற்காக மாவட்ட செயலாளர்கள் அனைவரும் வருகை தந்திருக்கிறார்கள்.

மேலும் சட்டமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாகவும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த விவகாரம் தொடர்பாகவும் கூட்டத்தில் வந்து ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளது.

இதனை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள் தொடர்பான எஸ்ஐஆர் குறித்து திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வந்து மாவட்ட
செயலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தமிழ்நாடு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தகவலானது தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து திமுக ஏற்கனவே ஓரணியில் தமிழ்நாடு மூலமாக உறுப்பினர்களை வந்து சேர்க்கக்கூடிய அந்த பணியை மேற்கொண்டு வருகிறது.

இதுவரை ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட செயலாளர்கள் வந்து இதுவரை எத்தனை உறுப்பினர்களை வைத்திருந்தனர் புதியதாக இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து எத்தனை உறுப்பினர்களை சேர்த்திருக்கின்றனர் என்பது தொடர்பான விவரங்களையும் மாவட்ட செயலாளர்கள் திமுக தலைவரும் தமிழ்நாடு
முதலமைச்சருமான முக ஸ்டாலிடம் வழங்க இருக்கின்றனர்.

தொடர்ந்து வர பல்வேறு தீர்மானங்கள் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்கான வழிவகைகள் குறித்து முக்கிய ஆலோசனையானது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவலானது தெரிவிக்கப்பட்டிருக்கிறது