Home தமிழகம் “தமிழ்நாடு: பெண்களுக்கு ஒரே நேரத்தில் இரு உதவித்தொகை கிடையாது!”

“தமிழ்நாடு: பெண்களுக்கு ஒரே நேரத்தில் இரு உதவித்தொகை கிடையாது!”

தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் :

பெண்கள் மத்தியில் மிகவும் நல்ல வரவேற்பை பெற்ற வெற்றிகரமான திட்டமாக இது அறியப்படுகிறது.

இந்த நிலையில், அரசு பெண்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மாதம் ₹1000 பெறும் பெண்கள் வேலைவாய்ப்பற்றோருக்கான மாத உதவித்தொகை திட்டத்தில் பயனாளியாக விண்ணப்பிக்க முடியாது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

அதாவது, இந்த இரு அரசு நலத்திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே பெண்கள் பயன்பெற முடியும்.

கலைஞர் மகளின் உரிமைத்தொகை திட்டம் :


தமிழ்நாட்டில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள திட்டமாகும். தற்போது சுமார் 1.30 கோடி பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

இந்த திட்டத்தில் சேர ரேஷன் கார்டு கட்டாயம். ரேஷன் கார்டு இல்லாதவர்கள் விண்ணப்பிக்க முடியாது.

ஏழை மற்றும் எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள், படித்தவர்களும் படிக்காதவர்களும் இதில் விண்ணப்பிக்கலாம்.

குடும்ப ஆண்டு வருமானம் ₹2.5 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.

அரசு ஊழியர்கள், மக்கள் பிரதிநிதிகள், வருமான வரி செலுத்துபவர்கள், சொந்த பயன்பாட்டிற்கு நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் தகுதியற்றவர்கள் ஆக கருதப்படுவர்.

முக்கிய அறிவிப்பு:


இந்த திட்டத்தில் மாதம் ₹1000 பெறும் பெண்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தில் சேர முடியாது என்று அரசு அறிவித்துள்ளது.

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டம்

படித்த ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வேலை கிடைக்காமல் காத்திருப்பவர்களுக்கு வழங்கப்படுகிறது.

கல்வி தகுதியின் அடிப்படையில் மாதம் ₹200 முதல் ₹600 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாற்று திறனாளிகளுக்கு அதிகபட்சமாக ₹1000 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மகளிர் உரிமைத்தொகை அல்லது பிற அரசு உதவித்தொகைகளை பெறுபவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகைக்கு தகுதியற்றவர்கள் என அரசு மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.