என் பேரு புல்பாண்டியன் ஆலங்கற சாட்டங்குளம் தாலுகா தூத்துக்குடி மாவட்டம். நான் வந்து 1979ல இருந்து செம்பூர் சடாநகர் சுப்பிரமணமசாமி கோயில் இருந்தேன்.
அப்போ அங்க இருந்து என்னை வந்து 2010ல தமிழ்நாடு அனுப்பி வச்சிட்டாங்க.
முதலூர் மஸ்க தல்வா கடையிலதான் நான் வேலை செஞ்சுட்டு இருந்தேன்.
அதுக்கப்புறம் திருச்செந்தூர் பாம்பே சடனா துப்பரசாமி கோயில் பல கோயில்கள்ல தருமம் எடுத்து 400 பள்ளிக்கூடத்து உதவி பண்ணிட்டு இருந்தேன்.
அதுக்கப்புறம் கொரோனால நின்னு போச்சு ,செல்லூர் ராஜ் சொன்னாங்க பணம் இருந்தா கவர்மெண்டக்கே கொடுத்துரு அப்படி வச்சிருந்தா ஆபத்து அப்படின்னாங்க அதில் இருந்து கலெக்டர் ஆபீஸ்லயே கொடுத்துக்கிட்டே இருந்தேன்.
அதுக்கப்புறம் நான் இப்போ பாம்பேக்கு போயிருந்து பாம்பே விநாயகர் சதுர்த்தி சடாநகர்ல விநாயகர் சதுர்த்திக்காக 2 லட்சம் 60 கொடுத்துட்டு வந்தேன்.
அது மாதிரி இங்க வந்து மழை காலம் வரதுனால மழை காலத்துக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 10 ஆயிரம் கொடுக்க ஆரம்பிச்சிருக்கிறேன். இதுல தொடர்ந்து கிருஷ்ண கிரி முதல் கன்னியாகுமரி வரை நான் கொடுப்பேன்.








