Home தமிழகம் “துன்பத்தை தாண்டி துணிவுடன் வாழ்வை வென்ற பவானி பாட்டி”

“துன்பத்தை தாண்டி துணிவுடன் வாழ்வை வென்ற பவானி பாட்டி”

சென்னை… பரபரப்புக்கு பஞ்சமே இல்லாத ஜன நெரிசல் மிகுந்த பெருநகரம் …

இங்கு எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி, உழைப்பின் வழியே கண்ணியம் கண்டு, வானுலகை வென்று நிற்கும் அசாத்திய பெண்மணி இவர். மயிலாப்பூர் சாந்தோம் பீச் கான்வென்டில் ஒன்பதாம் வகுப்பு வரை படித்த இவர்

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்து வீதிகளில் அன்றாடம் காணும் பவானி பாட்டி எனும் 78 வயது மூதாட்டி நம்மை ஆச்சரியத்தில் அசத்துகிறார்.

தினமும் 6 மணி நேரம் நடந்தே சென்று அனைவரிடமும் பொறி உருண்டை – முறுக்கு போன்ற நொறுக்கு தின்பண்டங்களை விற்று வருபவர். “மூலையில் படுத்து, முடங்கி சாவதை விட … உழைத்து, துருப்பிடித்து சாவதே மேல்…” என்கிறார் இந்த நம்பிக்கை நட்சத்திர பாட்டி. தெருவெங்கும் தனது வடிக்கையாளர்களிடம் ஆங்கிலம், ஹிந்தி ,கன்னடம் ,மலையாளம், தமிழ் என அனைத்து மொழிகளிலும் அசராமல் பேசி வியாபாரம் செய்கிறார்.


வாழ்வதற்கு வழி அறியா கணவன் இரு சிறு குழந்தைகளையும் பவானி பாட்டியை விட்டு விலகினாலும், தன்னம்பிக்கையோடு இரண்டு பிள்ளைகளை வளர்த்து இன்றும் சிறப்பாக வாழ முடியும் என்பதற்கு இவர் ஒரு முன் மாதிரி .

உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் உகந்தது இந்த நடைப்பயிற்சி என்பதால் மனநிறைவோடு வீதிகளில் அயராமல் நடந்து நொறுக்குத்தீனி விற்கிறார் இவர்.

வாழ்க்கையில் வாழ்வதற்கு துணிவின்றி சோர்ந்து விழுந்த இளம் வயது பெண்களை தட்டி எழுப்புகிறது 79 வயது நிரம்பிய வயதான இந்த பெண்மணியின் ஆங்கிலமும் தமிழும் கலந்த கணீர் குரல்.

கடவுள் கொடுத்த வாழ்க்கையில் என்ன அமைத்திருக்கிறானோ அந்த வாழ்க்கையை‌ ஏற்று மன அமைதியோடு வாழ்ந்து கர்மாவை நிறைவு செய்யுங்கள்.. என மிகவும் தெளிவோடு துணிவோடு பேசும் இவரது குரல் நிச்சயம் அனைத்து இடங்களிலும் ஒலிக்கட்டும். மக்கள் நலனில் பல நல்ல மாற்றங்கள் நிகழட்டும்.

உடலாலும் உள்ளத்தாலும் துவண்டு போனோர் பலரை கண்ணெதிரே நாம் பார்க்கையில், கடவுள் கொடுத்த இந்த மகத்தான வாழ்க்கையை ஏன்? உழைப்பின் பயனுள்ள வாழ்க்கையாக மாற்ற முடியாது. நிச்சயமாக முடியும் என்ற உத்வேகம் வருகிறது.