இப்போ உங்களுக்கு சின்னதா ஒரு சர்ப்ரைஸ் நம்ம கட்சியினுடைய வேட்பாளர் பட்டியலை இப்பதான் அறிவிக்க போறேன்.
மதுரை கிழக்கு வேட்பாளர் விஜய் இன்னும் முடிக்கல ஒரு நிமிஷம் மதுரை மேற்கு வேட்பாளர் விஜய் மதுரை மத்திய வேட்பாளர் விஜய் மதுரை தெற்கு வேட்பாளர் விஜய் மதுரை வடக்கு வேட்பாளர் விஜய் மேலூர் விஜய் சோழவந்தான் விஜய் திருப்பெருங்குன்றம் விஜய் திருமங்கலம் விஜய் உசரம்பட்டி விஜய் என்னடா எல்லா தொகுதியிலயும் ஒரே வேட்பாளர்னு பார்கறீங்களா? 234 தொகுதியிலயும் இந்த விஜய்தான்.
அதாவது உங்க விஜய்தான் உங்க சின்னம் இன்னும் சிம்பிளா சொல்லணும்னா உங்க வீட்டில இருக்கிற ஒருத்தர்தான் வேட்பாளரா நிக்க போறாங்க அந்த வேட்பாளர் நானும் வேறு வேறு இல்லை நீங்க அவருக்கு ஓட்டு போட்டீங்கன்னா எனக்கு ஓட்டு போட்ட மாதிரி.
இந்த முகத்துக்காக நீங்க ஓட்டு போட்டீங்கன்னா உங்க வீட்டில இருக்கிற உங்களுடைய வேட்பாளர் ஜெயிச்ச மாதிரி என்னடா இவர் ஏதோ ஓவரா சொல்றாரு நினைக்க வேணாம் பிராக்டிகலா அப்படிதான் இருக்கும் அப்படிதான் இருக்கணும் .
நீங்களும் அப்படிதான் நினைப்பீங்கன்னு நான் நம்புறேன் ஏன்னா இது நம்மள விட நம்ம எதிரிகளுக்கு இன்னும் நல்லாவே தெரியும்.
அதனால எல்லாம் இந்த அதிகார பலம் எல்லாத்தையும் தூக்கிட்டு வந்துருவாங்க வரட்டும் பாத்துக்கலாம்.







