Home தமிழகம் “விற்பனை புயலுக்கு இடையில் வருமானவரி சூறாவளி”

“விற்பனை புயலுக்கு இடையில் வருமானவரி சூறாவளி”

சென்னை கோவை திருச்சி மதுரை நெல்லை உள்ளிட்ட பல நகரங்களில் இயங்கி வரும் போத்திஸ் நிறுவனத்தில் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் வருமான வரி சோதனை நடக்கிறது.

ஜவுளி கடையின் உரிமையாளருக்கு சொந்தமான இடங்களில் காலை முதல் 40க்கும் அதிகமான வாகனங்களில் சென்று அதிரடி சோதனையில் இறங்கி உள்ளனர்.

சென்னை அபிராமபுரத்தில் போத்திஸ் நிறுவன உரிமையாளர் ரமேஷ் வீடு, நீலாங்கரையில் அவரது மகன்கள் அசோக் போத்ராஜா வீடுகளில் சோதனை நடக்கிறது.

குரோம்பேட்டையில் போத்திஸ் நகை மற்றும் துணிக்கடை ,டி .நகர் ஜிஎன்சிடி தெருவில் உள்ள துணிக்கடைகளில் சோதனை நடக்கிறது.

இதேபோல் கிண்டி ஈசிஆர் என சென்னையில் மட்டும் 20க்கும் அதிகமான இடங்களில் ரைடு தொடர்கிறது. வழக்கமாக போலீஸ் அல்லது துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் வருமானவரி சோதனை நடத்தப்படும். ஆனால் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் இந்த ரைடு நடக்கிறது.