நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி விடுமுறை தினம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ரலில் இருந்து அரக்கோணம் செல்லும் புறநகர் ரயில்கள் கும்மிடிப்பூண்டி வரை செல்லும் புறநகர் ரயில்கள் சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை செல்லும் .
புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றார் போல் பயணிகள் தங்களது பயண திட்டத்தை மேற்கொள்ளுமாறும் தெற்கு ரயில்வே அறிவுறுத்தி உள்ளது.







